Tamil is an old language with a rich body of literary works dating back 2,000 years. It is an important member of the Dravidian family of languages that include Kannada, Malayalam and Telugu. Go here for details on Tamil language.
வணக்கம்.
உலகின் எட்டு கோடி மக்களின் தாய்மொழி தமிழ். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகின்றது. இத்துணை தொண்மை வாய்ந்த தமிழையும், அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரையும், இந்த நவீன, தகவல் நுட்பியல் யுகத்திலும் பீடு நடை போட வைப்பது நம் முன் நிற்கும் சவாலாகும்.
லிப்ரெஓபிஸ் தமிழாக்கப் பணியானது இச்சவாலைச் சந்திக்கும் முயற்சிகளில் ஒன்று. இம்முயற்சியும் ஓரிருவரது முயற்சியல்ல. தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் முயற்சி. ஊர் கூடி தேரிழுக்கும் முயற்சி. அதில் உங்கள் பங்கும் இருந்தால் நலம்.
லிப்ரெஓபிஸ் உதிவிக் கோப்புகள் தமிழாக்கத் திட்டத்திற்கு வருக! இது ஒரு முக்கிய திட்டம். 45 ஆயிரம் சரங்களையும் 4 இலட்சம் சொற்களையும் கொண்ட திட்டம். இதுவரை சில நூறு சொற்களே தமிழாக்கப்பட்டுள்ளன.
இடப்பக்கத்தில் உள்ள கோப்புகளைத் திறந்து, புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரையுங்கள்.
இங்கு காணப்படும் சொற்கள் அனைத்தும் லிப்ரெஓபிஸில் பயன்படுகின்றன. ஆதலால், உங்களுக்கு லிப்ரெஓபிஸின் பயன்பாடு தெரிந்திருப்பது நல்லது. உங்களுக்கு லிப்ரெஓபிஸில் குறைந்த பரிச்சயம் இருந்தால், பின்வரும் சுட்டியிலுள்ள காணொளிகளைப் பாருங்கள். கண்டிப்பாக பயன்பெறுவீர்கள். சுட்டி: LibreOffice Writer
இங்கு பயன்படுத்தப்படும் சொற்களில் பல நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தாத கலைச்சொற்கள். இக்கலைசொற்களைப் பெற தமிழ் இணைய கல்விக்கழகம், விக்சனரி, ஐரோபிய அகராதி ஆகிய தளங்களைப் பயன்படுத்தலாம்.